குஞ்சுக்கால்வெளியில் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை

Sri Lankan Tamils Mullaitivu Thurairajah Raviharan
By Shan Feb 28, 2026 10:30 AM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய தமிழ் மக்களிடமே கையளிக்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கிராமமக்களால் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், காணி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எழுத்துமூலக் கோரிக்கை மற்றும் காணி ஆவணங்களின் பிரதியைப் பெற்றுக்கொண்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை உப்பளம் அமைக்கும் முயற்சிகளை நிறுத்திவைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தம்மால் கடிதம் அனுப்பப்படுமெனவும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்தப்பகுதியில் எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாமென பொலிசாருக்கும் கடிதம் அனுப்பப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்

தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்

பதற்ற நிலை

குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளால் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு தீர்வுகாணுவது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று (27.02.2026) இடம்பெற்ற கலந்துரையாடலியே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குஞ்சுக்கால்வெளியில் தமிழர்களின் பூர்வீக்காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை | Request Ancestral Relics Tamils Kunjukalveli

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் முயற்சியொன்று 27.02.2026இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள், சட்டவிரோதமாக உப்பளம் அமைக்க முற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 3மணிக்கு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டவிரோதமாக உப்பளம் அமைப்பதற்கு முயற்சித்த தரப்பினர் ஆகியோர் வருகைதரவில்லை.

இந்நிலையில் குறித்தகூட்டத்தில் குஞ்சுக்கால்வெளிப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு தாம் தமது இடங்களிலிருந்து இடம்பெயரும்வரையில் பயிற்செய்கையில் ஈடுபட்டுவந்த தமக்குரிய தனியார் அறுதி உறுதிக் காணிகள், 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பிற்பாடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயத்திற்குரிய காணிகள் எனக் கூறப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது மாவட்டசெயலாளரிடம் முறையீடு செய்யப்பட்டது.

அத்தோடு இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமது பயிற்செய்கைக் காணிகளில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு சட்டநடவடிக்கை மேற்கொண்டதாகவும் இதன்போது மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இத்தகையசூழலில் குஞ்சுக்கால் வெளியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது அறுதி உறுதிக் காணிகளில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் உப்பளம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது வனஜீவராசிகள் திணைக்களம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் மக்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனாலும் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் முறையிடப்பட்டது.

எனவே குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமது பூர்வீக அறுதி உறுதி பயிர்ச்செய்கைக் காணிகளை தமக்கு மீட்டுத்தருமாறு இதன்போது மாவட்டசெயலாளரிடம் காணிக்குரிய மக்களால் தமது காணி ஆவணங்களுடன் கோரிக்கைக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US