வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் சபையில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட விடயம்
வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் தொடர்ச்சியாக வழிபாடுகளை செய்து வந்தனர்.
ஆனால் மலையை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
என்ற போதும் நீதிமன்றத்தால் மலை சேதப்படுத்தப்படவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்ச்சியாக மக்கள் வழிபட்டு வந்த ஆலயம்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கேட்பது குறித்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கான அனுமதியை எடுத்து தருமாறே என கூறியுள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
