தொடரும் தமிழர் மீதான அடக்குமுறை: வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் கவலை
நினைவு கஞ்சிகளை இராணுவம் காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துள்ள நிலையில், நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றமை தமிழர் மீதான அடக்குமுறைகளை வெளிப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆக்கப்பட்ட உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று(25.04.2024) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் ஒன்றினை மேறகொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம்.
எமக்கான நீதி
அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைத்தும் விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுவரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.
எத்தனையோ போராட்டங்கள் வாயிலாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதுவரையில் எமக்கான நீதி கிடைக்கவில்லை.
கடந்த யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி குடித்து உயிரை காத்து
கொண்டோம் அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும்
முகமாக மே18முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தது.
குறித்த நினைவு கஞ்சிகளை இராணுவம் மற்றும் பொலிஸார் காலால்தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துள்ளனர்.
ஆனால் இன்று நாடுபூராகவும் வெசாக் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் எந்த குழப்பங்களும் இல்லாமல் நடாத்துகின்றனர்.
அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
