பதவிகளுக்காக ஆசைப்படாமல் கடற்றொழிலாளர்களுக்கான சேவைகளை வழங்க முன் வருமாறு கோரிக்கை!
கடற்றொழில் அமைப்புகள் பதவிகளுக்காக ஆசைப்படாமல் கடற்றொழிலாளர்களுக்கான சேவைகளை வழங்க முன் வர வேண்டும் என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அண்மையில் மடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் இந்திய தூதரகம் வழங்கிய உவிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கூட்டுறவு கடத்தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளில் பலர் பதவிகள் கிடைத்தால் போதும் ஒன்று பதவிகளை பெற்றுக் கொண்ட பின்னர் மக்களுக்கு சேவை செய்வதில்லை.
கடற்றொழிலாளர்களுக்கு சேவை
கடற்றொழிலாளர்களுக்கு சேவை செய்வதற்காக பல்வேறு தரப்புகளை அணுகி சேவை செய்து கொண்டிருந்தாகவும் தொடர்ந்தும் சேவைகளை, பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

உங்களால் கடற்றொழிலாளர்களுக்கு உதவ முடியாவிட்டால் ஒதுங்கி இருக்குமாறும், கடற்றொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றவர்களை தடுக்க வேண்டாம் என்றும், குறிப்பிட்டார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri