சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் - சாமர சம்பத்
சிறைச்சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இருவரும் ஒரே பிரிவித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ஒரே பிரிவில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
விளக்க மறியல்
அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை எயார்பஸ் மோசடியில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்சவை, மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri