அவதானமாக இருங்கள்..! திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எல் நினோ (El Niño) காலநிலை நிலைமை தீவிரமடைந்து வருவதால், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் கணிசமான அளவு கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
திடீரென பெய்யும் அதிதீவிர மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எல்.கே. விஜேமான்ன ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது, எல் நினோ தாக்கமானது நீண்டகால வானிலை முறைகளை மட்டுமே பாதிக்கும் என்ற தவறான கருத்து நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் நடைமுறையில், இது தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைவீழ்ச்சியைக் குறைப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலான இரண்டாம் கட்ட இடைப் பருவமழைக் காலத்தில் மழைவீழ்ச்சியை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.