இலங்கையில் உள்ள வைரஸ் திரிபுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிப்பு
இலங்கையில் உள்ள வைரஸ் திரிபுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய வைரஸ்களின் வருகையை கண்டறிவதற்காகவே இந்த கண்காணிப்புகள் நடத்தப்படுதாக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறைத் தலைவரும், டெங்கு ஆராய்ச்சி மையத்தின்பணிப்பாளருமான பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
தமது ஆய்வகம் இலங்கையில் வைரஸ் திரிபுகளை தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி வருகிறது.கடந்த நவம்பர் மாத இறுதி வரை வைரஸ் திரிபுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இதுவரை புதிதான திரிபுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்டோபர் மாத தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட அதே திரிபு தான் நவம்பர் இறுதிக்குள்வெவ்வேறு பகுதிகளுக்கு பரவுவதைக் காண முடிந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் உருவாக்கியுள்ளதாக கூறப்படும் புதிய வைரஸ் திரிபு குறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் மாலவிகே,
காலத்துடன் இந்த திரிபுகள் மாறுபடுவதில் ஆச்சரியமில்லை.இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆரம்ப ஆய்வுகளின் படி, புதிய திரிபு முன்னைய திரிபுகளைக் காட்டிலும் பரவக்கூடியதாக தோன்றுகிறது.
எனினும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்றும் பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.