எரிவாயுவின் தரம் குறித்து இன்று வெளியிடப்படவுள்ள முக்கிய ஆய்வு அறிக்கை
வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஏழு மாவட்டங்களில் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட எரிவாயுக்கள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவுகள் காரணமாக இவ்வாறு கொள்கலன்கள் வெடித்ததாக குறிப்பிடப்படும் பின்னணியில் இது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டது.
எரிவாயுவின் தரம் பற்றி ஆய்வு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு கொள்கலனில் உள்ளடக்கப்படும் வாயுக்கலவையின் விகிதாசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நாட்டின் பல பாகங்களில் திடீரென வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்! வெளியான பின்னணி
நாட்டில் மற்றுமொரு பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு:கடும் அச்சத்தில் மக்கள்
யாழிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு : குழப்பத்தில் மக்கள்
நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam