யாழிலும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு : குழப்பத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கந்தரோடைப் பிரதேசத்திலும் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடிப்புக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.
கந்தரோடை, பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர்ச் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின்போது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியிலிருந்தமையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
அடுத்தடுத்து நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பெரும்பாலானோர் எரிவாயு அடுப்புக்களை புறக்கணிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
தொடர்புடைய செய்தி..
நாட்டு மக்களை அச்சுறுத்தும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்! கேகாலையில் வெடித்துச் சிதறிய அடுப்பு









வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
