வட மாகாண ஆளுநரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதிநிதிகள்

IMF Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Kajinthan Jan 14, 2024 07:04 PM GMT
Report

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று(14.01.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு

இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

இதன்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மாற்றம் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வடமாகாண ஆளுநர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல், கோவிட் தொற்றுக்கு பின்னரான நிலை, பொருளாதார நெருக்கடி , வரி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு இதன்போது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி நாட்டில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், விநியோக கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். 

சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

பொருளாதார நெருக்கடி

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக செயற்பாடுகளுக்கு புதிய வரிக்கொள்கை பாரிய சுமையாக அமைந்துள்ளதென வர்த்தகப் பிரதிநிதிகளும், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் கடன்களை பெறுவதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், வங்கி வட்டி வீதங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தங்களின் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுநரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதிநிதிகள் | Report Representatives International Monetary Fund

மேலும், இலங்கையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமையை தாம் அறிந்துக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி பீற்றர் ப்ரூர் (PETER BREUER) தெரிவித்தார்.

பொருளாதாரக் கொள்கைகள்

கடந்தகால பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு இவ்வாறான நிலையை அடைந்துள்ளதாகவும், நிலைமையை மாற்றியமைக்க குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறுக்கமான கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் இறுதியில் நல்ல சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்கள் தொடர வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதிநிதிகள் | Report Representatives International Monetary Fund

ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட நிதித்துறைசார் நிபுணர், பொருளியலாளர், உள்ளூர் பொருளியலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

15 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் : கடன் வழங்கும் பணி விரைவில்

15 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் : கடன் வழங்கும் பணி விரைவில்

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சர்களே காரணம் : மகிந்த சூளுரை

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சர்களே காரணம் : மகிந்த சூளுரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US