சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை
புதிய இணைப்பு
144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றுள்ளது.
அணிசார்பில் அதிகபடியாக, எஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முதலாம் இணைப்பு
தற்போது நடைபெற்று வரும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணி இடையிலான முதலாவது டி20யில் இலங்கை அணிக்கு 144 ஓட்டங்களை வெற்றி இலக்காக சிம்பாப்வே நிர்ணயித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற் வேண்டுமாயின் 144 ஓட்டங்கள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணி இடையிலான முதலாவது டி20 போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி இன்று (14.01.2024) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவுசெய்துள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
