தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை கையளிப்பு

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Election
By Rakesh Oct 15, 2026 08:46 AM GMT
Report

தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் நேற்று(14.10.2026) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நிர்வகிக்கும் சட்டங்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் தொடர்பான சட்டங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடமே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரிடம், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் அறிக்கையைக் கையளித்தனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு

பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற 31 முன்மொழிவுகளை ஆழமாக ஆராய்வதுடன், தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக முன்னர் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் அறிக்கைகளையும் பரிசீலிப்பதே நிபுணர் குழுவின் முக்கிய பணியாக இருந்தது.

தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை கையளிப்பு | Report Of The Expert Committee Election Laws

இந்தச் செயற்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட விடயங்கள், கருப்பொருள்கள் தொடர்பாகத் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், பதிவுசெய்யப்பட்ட பல அரசியல் கட்சிகளும் தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால அறிக்கை 

பொதுமக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து கிடைத்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தெரிவுக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை கையளிப்பு | Report Of The Expert Committee Election Laws

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான புதிய முன்மொழிவுகளையும் திருத்தங்களையும் சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்வது குறித்த தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதற்கும் குழு தீர்மானித்துள்ளது.

யாழ். அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

யாழ். அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டுப் பயணிகள் அதிரடியாக கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டுப் பயணிகள் அதிரடியாக கைது!

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US