யாழ். அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2026ஆம் ஆண்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சுமார் 10,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
குறித்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துப் பொது நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14.10.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
நிதி ஒதுக்கீடு
இதன்போது தலைமையுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியின் பயன்பாடு, திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்றைய கூட்டத்திற்காக அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் அவற்றின் திட்ட முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்ற விபரங்கள் கோரப்பட்டிருந்தபோதிலும், மாவட்டச் செயலகம் மற்றும் மாகாண அமைச்சுகள் தவிர்ந்த ஏனைய பல நிரல் அமைச்சுகளின் கீழ் இயங்கும் திணைக்களங்களிடமிருந்து கோரப்பட்ட விடயங்கள் தற்போதையவரை கிடைக்கப்பெறாமை தொடர்பில் முதலில் சுட்டிக்காட்ட விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam