நாணய மாற்று நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
அனுமதிப் பத்திரங்களை பெற்ற வங்கிகள் வழங்கும் வீதங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நாணயங்களுக்கு பணத்தை வழங்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நாணய மாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ள வங்கிகளை விட அதிக அந்நிய செலாவணி விகிதங்களை வழங்குவது 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாணய மாற்று நிறுவனங்கள் அமெரிக்க டொலர்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அனுமதிப் பெற்ற வங்கிகளில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவது குறைந்துள்ளதாக பேசப்படுகிறது.