வளிமண்டலவியல் திணைக்களம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் 36 மணி மணித்தியாலத்திற்கான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.10.2023) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், “ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
