பாடசாலைகளை திறந்தால் மாணவர்களுக்கு ஆபத்து! கல்வி அமைச்சர் தகவல்
தற்போதைய கோவிட் தொற்று அச்சுறுத்தலில் பாடசாலைகளை மீள திறந்தால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது.
மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்றின் வேகம் இன்னமும் குறையவில்லை. தற்போதைய நிலைமையில் அவசரப்பட்டு பாடசாலைகளைத் திறப்பது மாணவர்களுக்கு சுகாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி
நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து
வருகின்றோம் என்றார்.