பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்..
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் காலமானார்.
நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நந்தா மாலினி
1943ஆம் ஆண்டு ஒகஸ்ட் 23ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறு வயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியவர்.

பல தசாப்தங்களாக இலங்கை இசைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைக்காக ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் நந்தா மாலினி பெற்றுள்ளார்.
சிறந்த மற்றும் பிரபலமான பாடகியாக 12 சரசவி விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
ஈடுசெய்ய முடியாத இழப்பு
இலங்கைக்கு வெளியேயும் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்த அவர் சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1988 டிசம்பர் 16ஆம் திகதி தனது 250ஆவது இசை நிகழ்ச்சியை நடத்திய அவர், 2010ஆம் ஆண்டு சிரச தொலைக்காட்சியுடன் இணைந்து நாடு முழுவதும் 25 நேரடி தனிநபர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
தனித்துவமான குரல் மற்றும் இசை பாணியால் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை வென்ற நந்தா மாலினியின் மறைவு, இலங்கை இசைத்துறைக்கும் அவரை நேசித்த எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening