செங்கலடியில் அனுமதியின்றி நாட்டப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற நடவடிக்கை
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக நாட்டும் அடையாளப் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(22.01.2026) தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இதன்போது, வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை , தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. கடந்த 1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம்.

ஆனால், தொல்பொருள் திணைக்களம் எந்தவித ஆலோசனையும் இன்றி இந்த பணிகளை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழிக்கான முக்கியத்துவம்
இது தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன்,
நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர்.
முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது.
பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam