அடுத்த தேர்தல்களிலும் என்.பி.பியே வெற்றி பெறும்! அமைச்சர் பிமல் அறிவிப்பு
எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாக தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மக்கள் ஆதரவு தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்றும், அதனால் அரசியல் ரீதியான எந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நெருக்கடி
கடந்த கால ஆட்சிகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு திடமான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிரணிகள் இந்த அரசை நிலையற்றதாக காட்ட முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டிய அமைச்சர், அவை அனைத்தும் அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே என்றும் குறிப்பிட்டார்.
மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டுள்ளதால், இவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார். மேலும், எதிர்வரும் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டு மக்கள் அரசின் செயற்பாடுகளை நேரடியாக அனுபவித்து வருவதால், மீண்டும் வலுவான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சுத்தமான அரசியல் கலாசாரம்
நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு என்றும், அதற்காக எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதில் அரசு உறுதியாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிரணிகளின் விமர்சனங்களும் அரசியல் முயற்சிகளும் அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றும், மக்கள் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி அரசு தனது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam