வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்
அந்த வகையில் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தன.
இதன்படி, கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 947.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி போக்கு
இதேவேளை, ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டிற்குப் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் நாட்டிற்குப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதற்கமைய, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 80.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியைக் காட்டி, ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளன.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்