வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்
முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மே 18 தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன
படுகொலையையிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதிவரை கஞ்சிவாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று (11.05.2024) முல்லைத்தீவின் இருவேறு இடங்களான விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி - ஷான்
கிளிநொச்சி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
செய்தி - எரிமலை, யது
மன்னார்
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த
பெற்றோர்கள், முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின்
பெற்றோர்கள், உறவினர்களால் இணைந்து
மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செய்தி - ஆஷிக், ராயூகரன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் கஞ்சி வழங்கும் வாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
குறித்த நிக்ழ்வானது கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
செய்தி - பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |