யாழ்.மாநகர முதல்வர் வடக்கு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது.
இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆலய நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள்
இன்று மதியத்துக்குப் பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்தி நினைவேந்தலை எழுச்சியுடன் கடைப்பிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.
அத்துடன் மாலை 6.05 மணியளவில் தாயகத்தில் உள்ள ஆலயங்களில் மணியொலியை
எழுப்புமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 6 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் கிடந்த 'ஆண் குறி'! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. பின்னர் தெரிய வந்த உண்மை News Lankasri

முதலில் தவறிய வாய்ப்பு..பின் கோல்கீப்பரிடம் மாயாஜாலம் செய்து கோல் அடித்த மெஸ்சி..PSG வெற்றியால் ஆர்ப்பரித்த மைதானம் News Lankasri

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை... News Lankasri

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam
