மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
"ஒவ்வொருவரும் தமது உயிரிழந்த அன்புக்குரிய உறவுகளை அமைதியாக நினைவுகூருவதற்கு முழு உரிமை உள்ளது. அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவு நாள்
நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கில் பகிரங்கமாக ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கு உங்கள் அரசு அனுமதி வழங்கியிருக்கின்றதா?என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“இலங்கை ஜனநாயக நாடு. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது.
ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு.
இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது" என்று தெரிவித்துள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
