உக்ரைன்-அமெரிக்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸெலென்ஸ்கி, "ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்படும் பட்சத்தில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கான தீர்வு
இது இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகவில்லை என்றாலும், இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்தார்.

"ஐரோப்பா வெறும் பேச்சளவில் நிற்காமல், தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த கண்டம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், உக்ரைன் போருக்கான தீர்வு "மிக விரைவில் வரும்" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக அமைதியை நிலைநாட்டத் தான் உருவாக்கியுள்ள 'அமைதி சபை' (Board of Peace) என்ற அமைப்பை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
கிரீன்லாந்து விவகாரம்
இந்தப் புதிய அமைப்பு சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னின்று செயல்படும் என்று அவர் கூறினார்.
மறுபுறம், கிரீன்லாந்து தீவு தொடர்பான விவகாரத்தில் ட்ரம்ப்பின் கருத்துக்கும் கிரீன்லாந்து பிரதமரின் கருத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்து தொடர்பாக ஒரு "ஒப்பந்தக் கட்டமைப்பு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"எங்களுக்குத் தெரிந்த தற்போதைய அதிகாரப்பூர்வ கட்டமைப்பையே நாங்கள் தேர்வு செய்கிறோம்" என்று கூறி, ட்ரம்ப்பின் திட்டத்தை நாசூக்காக நிராகரித்தார்.
இந்த நிகழ்வுகள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் 'அமைதி சபை' உக்ரைன் போரில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam