அம்பிட்டிய தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் முன்னிலை..
இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுமனரத்ன தேரர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் அ.தர்சினி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்துள்ளார்.
அரச அலுவலகம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை,அரச கடமையினை ஆற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - பவன்
மகிந்த - ரணிலை நெருங்கும் சிக்கல்.. முக்கிய சாட்சிகளின் மர்ம மரணங்கள் - ஐநா வெளியிடும் அதிரடி அறிக்கை