புத்தளம் சென்றடைந்த தமிழக அரசின் நிவாரண பொருட்கள்!(Photo)
தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்கமைய, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் நேற்று(30) புத்தளம் புகையிரத நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.
நிவாரண பொருட்கள்
இதன்போது ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் கிலோ கிராம் அரிசி மூட்டைகள் மற்றும் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான 7500 பால்மா பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.எச்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
16 பிரதேச செயலகங்கள்
புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட 16 பிரதேச செயலகங்களில் தெரிவு
செய்யப்பட்ட 7500 குடும்பங்களுக்கு இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.