பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது விசேட உரை ஒன்றை நிகழ்த்தி ஜனாதிபதி குறித்த நிவாரணத் திட்டங்களை அறிவித்தார்.
நிவாரணத் தொகைகள்
சீரற்ற காலநிலை ஏற்படுத்திய பேரிழிவினால் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

வீட்டுக்கான உரித்து பொருட்படுத்தப்படாமல், வீட்டுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால், மீண்டும் குடியேற முடியாத, முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு 50 இலட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும்.

மேலும், அனர்த்தங்களால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச காணி வழங்கப்படும் அல்லாத பட்சத்தில், காணி கொள்வனவிற்காக 50 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். எனினும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுமதி கிடையாது.
அனர்த்தங்களின் போது பகுதியளவு சேதமடைந்த வீடுகளை மீள புனரமைத்துக் கொள்வதற்காக நான்கு கட்டங்களின் ஊடாக 25 இலட்சம் ரூபா வரையில் கொடுப்பனவு வழங்கப்படும்.
அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வணிக கட்டடங்களை மீள ஆரம்பிக்க 50 இலட்சம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பட்டார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
அமெரிக்காவே வாங்கும்போது இந்தியாவிற்கு உரிமை உண்டு.., ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புடின் விளக்கம் News Lankasri