பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கையெழுத்து போராட்டம் (Photos)
பங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கையெழுத்துப் பெறும் போராட்டம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண மக்கள் திட்டவரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (28.01.2023) வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன மத பேதமின்றி வருகை
அதில் ''வசந்தவுக்காக ஒரு வாக்கு மூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுதலை செய்'' எனவும் வலியுறுத்தி சத்திய பிராமணம் செய்யும் வகையில் சமாதான நீதவான் முன்னிலையில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
இதில் இன, மத பேதங்களைக் கடந்து பலரும் வருகை தந்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
