இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை : இயக்குனர் ரஞ்சித் ஜோசப்
இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்று ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.
நாளை 10ஆம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம்
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள ஊழி திரைப்படம் நாளை 10ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இலங்கையில் இத் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான நிலவரத்தை இவ் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் 8ஆம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.

எனினும் 48 மணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் குறித்த செய்தி எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழலில் உள்ளோம்.
கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம். எனவே, நாளைய தினம்(10.05.2024) இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு இலங்கை வெளியீடு தொடர்பாக வெளிப்படுத்த உள்ளோம் என்பதையும் அறியத் தருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam