தமிழர்களின் வலிகளை சுமந்த ஊழி திரைப்பட பாடல் வெளியீடு
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடானது தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (08.05.2024) கிளிநொச்சி (Kilinochchci) மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் எதிர்வரும் மே 10ஆம் திகதி 16 நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைப்பட வெளியீடு
மேலும், இந்த திரைப்படமானது ஜோசப் ரஞ்சித்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ளது.
அதேவேளை, ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் கவி வரிகளில் உருவான பாடலுக்கு இந்திய பாடகர்களின் குரலிற்கு புதிய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், பாடல் இறுவெட்டினை ஈழப்பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பாடல் ஆசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் அனுபவ உரையாற்றினர்.
மேலும், முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சர், முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் : எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
