கிழக்கு நோக்கி நகரும் பூமி...! ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
பூமியில் இருந்து அதிகளவிலான நிலத்தடி நீர் எடுப்பதால் பூமி மோசமான நிலையை நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிருள்ள மனிதர்கள் முதல் விலங்குகள் உட்பட உயிரற்ற தாவரங்கள் வரை அனைத்திற்கும் நீர் மிக அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.
இந்நிலையில், நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்க மனிதர்கள் பல்வேறு வழிகளில் நீரை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பூமியின் கிழக்கு நோக்கிய நகர்ச்சி
அந்த வகையில், அதிகளவிலான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1993 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மனிதர்கள் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு பெரும் நிலத்தடி நீரை மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகியவையே பயன்படுத்தியுள்ளதாகவும் நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த ஆய்வின் தலைமை அதிகாரி சியோல் நேஷனல் பல்கலைகழகத்தின் (Seoul National University) புவி இயற்பியலாளர் வென் சியோ கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |