சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
நீண்ட காலமாக சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (01) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர்.
விடுதலை
குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்தசுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி கடந்த 2018 இல் உயிரிழந்தார்.
இந்நிலையில் இறுதிக்கிரியைக்கு கடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.
இறுதிக்கிரியையினை முடித்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்தசுதாகர் ஏறச்சென்றவேளை அவரது பிள்ளை தந்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்க வைத்தது.
நீதிஅமைச்சரே, நீதியைத்தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் விடுதலை தாருங்கள் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
