தமிழர் பகுதியில் ஆயுதமுனையில் மக்களுக்கு மிரட்டல்: ஸ்ரீநாத் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு- வாகரைப் பிரதேசத்தில் வனவளத்துறை திணைக்கள அதிகாரிகளால் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (01) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் வனவளத்துறை திணைக்களம் சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மக்களின் குடிசைகளை எரித்து, சொத்துக்களை அழித்து மிக மூர்க்கத்தனமாக தாக்கி விளைச்சல்களையும் எடுத்து சென்றுள்ளார்கள்.

வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைக்கப்பட்ட தமிழர்கள்: ரவிகரன் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
விசாரணை
இது தொடர்பில் நியாயம் கேட்க சென்றவர்கள் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம்பிரதேச செயலருக்கும் அறிவித்திருந்தோம்.
இச்சம்பவம் தொடர்பில் வனவளத்துறை திணைக்களத்துக்கு எதிராக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |