இந்திய அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்
இந்திய அதானி திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு, இலங்கையின் எரிசக்தி அமைச்சகம், அதானி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னாரில், 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்குள், இரண்டு காற்றாலை மின் திட்டங்களும், மின்மாற்றக் குழாய்களையும் கட்டுவது அடங்குகின்றன.
பேச்சுவார்த்தை
முன்னதாக 0.08 அமெரிக்க டொலர் விலை நிர்ணயிக்கப்பட்டதால், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கட்டணங்களைக் குறைக்குமாறும் கேட்டுக் கொண்டது.
எனினும், இதனை ஏற்றுக்கொள்ளாத அதானி நிறுவனம், திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், கடந்த திங்கட்கிழமை அதானி நிறுவனத்திற்கு, எரிசக்தி அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.
அதில், இரண்டு வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு கோரியுள்ளதாக, அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
