வலி. வடக்கு காணிகளை விடுவிப்பது குறித்து இன்று உயர்மட்டக் கள ஆய்வு
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகப் பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினர் இன்று (17.11.2026) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கள ஆய்வையடுத்து,
வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளிலிருந்து ஒரு தொகுதி நிலங்களை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பில் கள ஆய்வு நடத்துவதற்காகவே இவர்களின் இந்த விசேட விஜயம் இடம்பெறுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட விமானம் மூலம் இன்று காலை பலாலி விமான நிலையத்துக்கு வருகை தரும் இம்மூவரும், இன்று மாலை வரை அங்கு தங்கியிருந்து படையினர் வசமுள்ள பகுதிகள் மற்றும் விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளனர்.
இன்றைய இந்த உயர்மட்ட கள ஆய்வையடுத்து, மிக விரைவில் வலிகாமம் வடக்கிலிருந்து ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்