மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு கண்ணீர் காணிக்கை!
புதிய இணைப்பு
தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது தேராவில் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாம் இணைப்பு
தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுத்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம்(27.11.2024) கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாவீரரின் பெற்றோர்கள்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரரின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் அவர்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய அவர்களையும் கண்ணியமான முறையில் இன்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan