மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இதற்கமைய கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கண்டி கங்கவட்ட கோரளை, உடுதும்பர, தோலுவ, யட்டிநுவர, உடபலத்த, பஹத்தஹேவஹெட்ட, உடுநுவர, பாததும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாத்தளையில் உக்குவெல, யடவத்த, ரத்தோட்டை, பல்கமுவ, அம்பகல பல்கமுவ, வில்கமுவ, நாவுல ஆகிய இடங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனையிலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
