முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள்
பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினர் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டனர்.
குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (15) காலை 9.30 மணியில் இருந்து பி.ப 2.30 மணிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல கட்டங்கள்
இதன்போது காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் 40 பேரிடம் இந்த பதிவுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இச்செயற்பாடு பல கட்டங்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய ஆணைக்குழுவின் தவிசாளர் மகேஸ் கட்டுலாந்த, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தற்பரன், காணாமல் போனோர் அலுவலகத்தின் அங்கத்தவர் யோகராசா மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam