இன்று நள்ளிரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி: இலங்கை மக்களுக்கு வாய்ப்பு
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (16) நள்ளிரவு மற்றும் நாளை காலை தெரியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் மழை சிம்ம ராசியில் ஏற்படுவதால், இதற்கு லியோனிட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாளை அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை இந்த விண்கல் மழையை மிக அவதானமாக காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றிரவு மற்றும் நாளை காலை ஆண்டின் மிக முக்கியமான விண்கல் மழைகளில் ஒன்றை நாம் அவதானிக்க முடியும்.peopl

லியோனிட்ஸ் விண்கல்
இந்த விண்கல் மழையை நாம் லியோனிட்ஸ் விண்கல் மழை என்று அழைக்கிறோம். இந்த பெயருக்கான காரணம், பொதுவாக சிம்மம் அல்லது சிங்கம் விண்மீன் தொகுப்பில் இதை நாம் அவதானிக்க முடியும்.
பூமி வால் நட்சத்திரத்தின் பாதையில், பூமியின் வளிமண்டலத்துடன் செல்லும்போது வால் நட்சத்திரத்தால் விடப்பட்ட சிறிய தூசி துகள்களின் தொடர்பு காரணமாக இந்த விண்கல் மழை ஏற்படுகின்றது.
எனவே, இந்த விண்கல் மழையின் போது அந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் அதிக வேகத்தில் மோதுவதால், இந்த விண்கற்களை நாம் அதிக பிரகாசத்துடன் பார்க்க முடியும்.

வெகுதூரம் பயணிக்கும் விண்கல் மழை
இது கிழக்கிலிருந்து வெளிப்பட்டு இரவில், அதாவது விடியற்காலையில் வானத்தில் வெகுதூரம் பயணிக்கும்.
எனவே, இந்த விண்கல் மழையைப் பார்ப்பதற்கு சிறந்த நேரம் பொதுவாக அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஆகும்.
"இந்த காலகட்டத்தில் இந்த விண்கல் மழையை பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 20 விண்கற்கள் வரை நாம் கவனிக்க முடியும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam