என்னிடம் உள்ளவர்கள் கட்சி தாவ மாட்டார்கள்! சஜித் நம்பிக்கை
அரசியல் இலாபங்களுக்காக இரகசிய உடன்பாடுகளில் ஈடுபடுவதை நாம் அனுமதிப்பதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனது அரசியல் அணியில் உள்ளவர்கள் அரசியல் நலனிற்காக கட்சி தாவலில் ஈடுபடாதவர்கள்.
இரகசிய உடன்பாடுகள்
எனது அணியில் உள்ளவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம்,காணி உறுதிப்பத்திரம்,பணம் போன்றவற்றிற்காக கட்சிதாவாதவர்கள்.
அரசியல் இலாபங்களிற்காக இரகசிய உடன்பாடுகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை என்பது கட்சியின் கொள்கை, கட்சியின் உறுப்பினர்களிற்கும் தனி நபர்களிற்கும் இது பொருந்தும்.
கட்சிக்கு ஏதாவது கிடைத்தால் அதனை நாங்கள் மக்களின் நன்மைக்காக பயன்படுத்துவோம். என்ன நடந்தாலும் சரி பணத்தை பயன்படுத்தி எவரையும் வாங்கமாட்டோம், அவ்வாறானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட அனுமதிக்கமாட்டோம், அவ்வாறான நபர்கள் எங்கள் பக்கத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
