மகிந்தவின் பெறுமதிமிக்க அரசியல் டீல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது மகன் நாமலுக்கு ஆதரவளிக்குமாறு மகிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் நட்புறவோடு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தல் செலவு
தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும். அத்துடன் கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர முதலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாமலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, மொட்டு கட்சியுடன் இணைந்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் கோரிக்கையினால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக, அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 41 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
