கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது தொடர் போராட்டம் இன்று ஆரம்பமானது.
குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்ட பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் அறவழி போராட்டத்தினை அவர்கள் ஆரம்பித்தனர்.
சுழற்சி முறையிலான குறித்த போராட்டம் தொடர் போராட்டமாக இன்று ஆரம்பிக்கப்பட்டு 6ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தின் போது தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்ததுடன், சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
