ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!
திருகோணமலையைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த சந்தேக நபர் நேற்றிரவு(28.05.2026) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2045 மில்லிகிரேம் ஐஸ் போதைப்பொருள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிய வருகின்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லிகிரேம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan