யாழில் தாக்குதலுக்குள்ளான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விடுத்துள்ள கோரிக்கை (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவுக்கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.











Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
