காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம் நேற்று (27.10.2023) காலை இடம்பெற்ற போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இரு அணியினருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
பொலிஸாரால் கைது
இது தொடர்பில் இரு பகுதியினரும் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உட்பட 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (27.10.2023) இரவு குறித்த 7 பேரையும் பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளதுடன், இணக்க சபையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 23 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
