ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஹிருனிகா உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கு நேற்று(05) விசாரணைக்கு வந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 6ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஹிருணிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பொலிஸாருக்கான உத்தரவு

இந்த வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த குழுவை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிப்பதற்கான முறையான விசாரணைகளை மேற்கொண்டு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri