வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 121 போதைப் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பாவனைக்கு அடிமையாகிய 121பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள்
வடபகுதியை சேர்ந்த இளைஞர்களே போதைக்கு அடிமையாகிய நிலையில் பொலிஸாரால் அழைத்து வரப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐவர் வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேடுதல் நடவடிக்கை
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam