பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகள் நேற்று(15) மாலை தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கைதிகளை தேடும் நடவடிக்கை
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தை சேர்ந்த கைதிகள்
அவ்வாறு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் மாலை விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய 5 பேரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
