கொழும்பு புறநகர் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு
கொழும்பு புறநகர் பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் பொலிஸாரால் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெஹிவளை - மல்வத்தை வீதியில் இயங்கி வந்த குறித்த நிலையம் தேசிய ஆபத்தான ஒளடத கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சட்ட விரோதமாக நிலையத்தை நடத்தி வந்தார் எனக் கூறப்படும் உரிமையாளரும், உரிமையாளருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
இந்நிலையத்தில் 34 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லை என சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது இந்த நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் நபர்கள் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50 மற்றும் 51 வயதுடைய தெஹிவளை மற்றும் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
