கொழும்பு பங்குச் சந்தையின் பரிமாற்றங்களில் இன்றும் வீழ்ச்சி!
கொழும்பு பங்குச் சந்தை, இன்று தமது வர்த்தக நடவடிக்கைகளை இன்று இரண்டு தடவைகள் இடைநிறுத்தியது
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் , S&P SL20 சுட்டெண் 7.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
முற்பகல் 11.02 மணி முதல் 11.07 மணி வரை ஐந்து நிமிடங்களுக்கு சந்தை மூடப்பட்டது.
முன்னதாக பங்கு சந்தை முற்பகல் 10.31 முதல் 11.01 வரை இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து முற்பகல் 11.07 மணி முதல் 11.32 மணி வரை 25 நிமிடங்களுக்கு ஏல அமர்வு நடத்தப்பட்டது.
வர்த்தகம் நிறுத்தப்பட்ட நேரத்தில், S&P SL20 குறியீடு 209.16 புள்ளிகள் (8.88%) சரிந்து 2,146.38 ஆகவும், அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 548.50 புள்ளிகள் (7.30%) சரிந்து 6,965.35 ஆகவும் இருந்தன



